போக்குவரத்து பாதிப்பு.. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை..!
near kashmeer child born in ambulance
காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தில் உள்ள கூல் என்ற ஊரைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஷகீனா. இவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த ஆம்புலன்ஸ் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால், மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றது.
இந்நிலையில், அந்த ஆம்புலன்சுக்கு ராணுவ போலீசார் வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் மெகர் என்ற இடத்துக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, அங்குள்ள மலையில் இருந்து திடீரென கற்கள் உருண்டுவிழுந்ததால் மீண்டும் ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டது.
அப்போது பிரசவ வலியால் உச்ச நிலையில் தவித்த அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களின் உதவியுடன் குழந்தையை பெற்றெடுத்தார்.
English Summary
near kashmeer child born in ambulance