கேரளாவில் பரபரப்பு.! தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்துக்கொண்ட முதியவர்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம் மரநாட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் வயது முதிர்வு காரணமாக பல்வேறு உடல் நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இந்த நோய்களால், விஜயகுமார் கடந்த சில நாட்களாகவே வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். 

இந்நிலையில், விஜயகுமார் நேற்று முன்தினம் இரவு புதூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று, அங்கு தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீட்டில் வசித்து வந்த விஜயகுமாரின் சகோதரி, வீட்டுக்கு அருகே தீ எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின்னர் அந்த தீ தானாக பிடித்துக்கொண்டது என்றுக் கருதி அதனை அண்டை வீட்டை சேர்ந்த ஒருவருடன் இணைந்து அணைத்து விட்டு வீட்டிற்குச் சென்று விட்டார். 

இதைத் தொடர்ந்து, விஜயகுமாரின் சகோதரி நேற்று காலை தீ பிடித்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கு அவருடைய சகோதரர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து தனது சகோதரரைப் பார்த்து கதறி அழுதார்.

இந்த கதறல் சத்தம் கேட்டு ஓடிவந்த க்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

அதில், விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன் பின்னர் அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதமும் சிக்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala old man sucide attempt for health issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->