மகாராஷ்டிரா : வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண் உள்பட மூன்று பேரை அரிவாளால் வெட்டிய நபர்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் தோகாலா பாடா குக்கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுடன் அந்த பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். 

அப்போது, அந்த வழியாக வந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பெண் மற்றும் அவரது மகளைத் தாக்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பண்ணை வீட்டு காவலாளி ஓடி வந்து தடுக்க முயன்றார். 

ஆனால், அந்த நபர் காவலாளியையும் தாக்கி விட்டு உடனே அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த தாக்குதலில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பெண் மற்றும் சிறுமியை அரிவாளால் தாக்கிய நபர் யார்? எதற்காக அவர் தாக்கியுள்ளார்? என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra man attack to woman girl and security


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->