செல்போன் நம்பர் தர மறுத்த மாணவி.! ஆத்திரத்தில் புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றிய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம் வசாய் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பிரபல சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் இருந்து அடையாளம் தெரியாத நம்பர்கள் ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் படி போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவியின் புகைப்படத்தை பதிவிட்டு அதில், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆபாசமாக எழுந்தியது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் சமூக வலைத்தளத்தில் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றம் செய்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை செய்தனர். இதில் மாணவியிடம் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பாபட் சேக் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

அதன் பின்னர் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், "அந்த வாலிபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவியிடம் செல்போன் நம்பரை கேட்டதும், அதற்கு மாணவி மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரத்தில் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra young man arrested for obscene photo uplode social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->