மகாராஷ்டிரா : 65 வயதில் வாழ்க்கை துணை தேடிய முதியவர்.! ஆபாச வலையில் வீழ்த்தி பண மோசடி செய்த பெண்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்தார். கடைசி காலத்திலாவது தனக்கு ஒரு வழக்கை துணை வேண்டும் என்று நினைத்த இவர் இணையதள திருமண தகவல் மையம் மூலம் தனக்கு ஒரு வாழ்க்கை துணையை தேடினார். 

அப்போது அவருக்கு திருமண தகவல் மையம் மூலமாக பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். நாளடைவில் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு பேசி வந்தனர். இதையடுத்து, அந்த பெண், சில நாட்களிலேயே முதியவரிடம் நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளார். 

அதன் படி, அந்த பெண் திடீரென ஒருநாள் முதியவரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, அவர் முதியவர் முன் ஆடைகளை கழற்றி ஆபாசமாக நடந்து கொண்டார். இதைப்பார்த்து முகம் சுழித்த முதியவர் இணைப்பை துண்டித்துள்ளார். 

சிறிது நேரத்தில் அந்த பெண் வீடியோ காலை, பதிவு செய்து அதனை முதியவருக்கு அனுப்பி உள்ளார். மேலும், தான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பி மானத்தை வாங்கிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன முதியவர் அந்த பெண் கேட்கும் போது எல்லாம் பணத்தை அனுப்பிய படி இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் முதியவரின் சேமிப்பில் இருந்த அனைத்து பணமும் காலியானது. 

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான முதியவர் சம்பவம் தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் ரூ.60 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharstra woman money fraud to old man


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->