ஆரஞ்சு பெட்டிக்குள் 198 கிலோ போதைப்பொருட்கள் : கையும் காலுமாக சிக்கிய நபர்..! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலத்தில் மும்பை நகரில் வஷி பகுதியில் லாரி ஒன்று சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்றுள்ளது. அந்த லாரியை மும்பை வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் வழிமறித்து சோதனையிட்டு உள்ளனர். 

அந்த லாரியில் இறக்குமதி செய்யப்பட்ட ஆரஞ்சுகளை கொண்ட பெட்டிகள் இருந்தது. இருப்பினும் அந்த லாரியில், தொடர்ந்து அதிகாரிகள் சோதனை செய்ததில் ஆரஞ்சு பெட்டிகளுக்குள் 198 கிலோ எடை கொண்ட மெத்தாம் பெட்டமைன் மற்றும் 9 கிலோ எடையுள்ள அதிக தூய்மையான கோகைன் என்ற போதை பொருளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த போதை பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1,476 கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.  இதைத் தொடர்ந்து, இந்த சரக்குகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று மும்பை வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mumbai 198 kg drug smugling chease


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->