புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி தேவை - முதலமைச்சர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்திய அவர் பேசியதாவது, 

"புதுச்சேரி மாநிலத்தின் மீது எப்போதும் எனக்கு தனிப்பாசம் உண்டு. திமுகவின் தலைவர் கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் தான் புதுச்சேரி. அதேபோல், புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. இதனால் திராவிட இயக்கத்தின் தலைநகரம் புதுச்சேரி என்றும் கூறலாம்.

தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆளுநர் ஆட்டி படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஆட்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டை போலவே புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. 

புதுச்சேரியில் மீண்டும் திமுகவின் ஆட்சி நிச்சயம் அமையும். இதற்காக தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். நம் இரண்டு மாநிலத்திற்கும் போட்டி இருக்க வேண்டுமே தவிர பொறாமை இருக்க கூடாது. 

புதுச்சேரியில் ஒருபோது மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதுச்சேரி முதல்வர் நல்லவர் தான், ஆனால் வல்லவராக இருக்க வேண்டும் . 

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது நடக்கும் ஆட்சி மக்களுக்காக நடைபெறவில்லை. திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தற்போதைய தேவை" என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Near puthuchery mk stalin speach in dmk party marraige function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->