திருவிழாவுக்கு சென்று வீடு திரும்பிய பக்தர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..! - Seithipunal
Seithipunal


கோவில் திருவிழாவிற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் திடீரென கவிழ்ந்து அருகில் இருந்த குளத்தில் விழுந்தது. இதில், 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம், ஃபத்தேபூரில் சந்திரிகா தேவி கோயிலில் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட 50- க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு கடம்பூரை நோக்கி டிராக்டர் ஒன்று திரும்பிக் கொண்டிருந்தது. அந்த ட்ராக்டர், பதேயுனா கிராமத்திற்கு சென்ற போது, கவிழ்ந்து அருகில் இருந்த குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில், அதிகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தான் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் உடல்நிலைக் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் விஷாக் ஐயர் தெரிவித்துள்ளார். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இந்த விபத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, விபத்து குறித்து சார் காவல் நிலையத்தின் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near utra pradesh tractor accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->