குடிப்பழக்கம் உள்ளவங்களுக்கு பொண்ணு தராதீங்க - அமைச்சர் கவுஷல் கிஷோர்.!
near uttar pradesh minister Kaushal Kishore speach Drug addiction recovery program
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லம்புவா சட்டசபை தொகுதியில் போதைப்பழக்க மீட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் கவுஷல் கிஷோர் கலந்துகொண்டார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-
"எனது மகன் ஆகாஷ் கிஷோருக்கு அவனுடைய நண்பர்களால் மதுப்பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவனை ஒரு போதை அடிமைகள் மீட்பு மையத்தில் சேர்த்தோம். சில நாட்களுக்குப் பிறகு அவன் மதுப் பழக்கத்தில் இருந்து மீண்டுவிட்டதாக நினைத்து, திருமணம் செய்துவைத்தோம். ஆனால் திருமணத்துக்குப் பின்பும் அவன் மீண்டும் குடிக்கத் தொடங்கி இறந்து போனான்.
அவன் இறந்தபோது என் பேரனுக்கு இரண்டு வயதுகூட ஆகவில்லை. 'ஒரு குடிகாரரின் ஆயுள் மிகவும் குறுகியது. நான் ஒரு எம்.பி.யாகவும், என் மனைவி ஒரு எம்.எல்.ஏ.வாகவும் இருந்த போதுமே எங்கள் மகனை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. இருப்பினும், ஒரு சாதாரண மனிதரால் எப்படி அவர்களுடைய பிள்ளையைக் காப்பாற்ற முடியும்? நான் என் மகனை காப்பாற்றத் தவறியதால் என்னுடைய மருமகள் விதவை ஆகியுள்ளார்.
இதுபோன்ற ஒரு நிலை, உங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள். குடிப்பழக்கம் உள்ள ஒரு அதிகாரியை விட, குடி பழக்கம் இல்லாத ஒரு ரிக்ஷாக்காரர் அல்லது கூலித்தொழிலாளி கூட ஒரு நல்ல மாப்பிள்ளை தான்.
நம் நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்திலேயே 6.32 லட்சம் பேர்தான் இறந்தனர். ஆனால் இந்த போதைப்பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் செத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, போதைப்பழக்கத்தின் பாதிப்பு குறித்து மாணவப் பருவத்திலேயே, பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று அவர் பேசியுள்ளார்.
English Summary
near uttar pradesh minister Kaushal Kishore speach Drug addiction recovery program