பெற்றோர்களை அடுத்து காதலியையும் கொலை செய்து வீட்டில் புதைத்த வாலிபர் கைது.!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பாங்குரா பகுதியைச் சேர்ந்தவர் ஆகான்கிஷா என்ற சுவேதா. இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு சமூக ஊடகம் வழியே உதியன் தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. 

இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு, வேலைக்காக சென்று, அப்படியே உதியனுடன் சேர்ந்து வாழ தொடங்கினார். ஆனால், சுவேதா தான் அமெரிக்காவில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும், கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர், சுவேதாவுடன் அவரது குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து சுவேதாவின் சகோதரர், அவருடைய தொலைபேசி எண்ணை வைத்து தேடியதில் போபால் நகரை அடையாளம் காட்டியுள்ளது. 

இதையடுத்து, சுவேதாவின் குடும்பத்தினர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, போலீசார் விசாரணை நடத்தியதில், உதியன் சுவேதாவை கொலை செய்து பெட்டியில் வைத்து, வீட்டின் படுக்கை அறையில் புதைத்து வைத்துள்ளதும், அதன்மேல் சிமெண்ட் பூசி அடையாளம் தெரியாதபடி செய்ததும் தெரிய வந்துள்ளது. 

அதன் பின்னர், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 600 பக்களவில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் உதியனுக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்தனர். அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் உதியனுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கில் சந்தேகம் தீராமல் இருப்பதால் உதியனை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், உதியன் கடந்த 2010-ம் ஆண்டு தந்தை மற்றும் தாயை படுகொலை செய்தது தெரிய வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரின் உடலையும் தனது வீட்டு தோட்டத்தில் புதைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தப்படுத்தி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near west bengal young man arrested for parents and girl friend kill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->