நீட் தேர்வு முறைகேடு? மறுதேர்வு? 10 நாள் கெடு விதித்த உச்சநீதிமன்றம்!
NEET 2024 Exam case SC Order
கடந்த ஐந்தாம் தேதி நடந்த நீட் நுழைவு தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு நடைபெற்ற போது வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன.
மேலும் தற்போது நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் ஒரு தேர்வு மையத்தை சேர்ந்த ஆறு மாணவர்கள் மட்டும் 720க்கு 720 முழு மதிப்பெண்கள் பெற்று இருப்பது முறைகேடு நடந்த உள்ளதாக மாணவர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை பாஜக அரசு புறப்பணிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அவரின் அந்த பதிவில், நீட் தேர்வு முடிவுகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்கு பாஜக அரசு பதிலளிக்க வேண்டும். நீட் தேர்வு முறைகேடு புகார்களை விசாரித்து தீர்வு காண்பது தான் பாஜகவின் முதல் பொறுப்பாக இருக்கும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே நடந்து முடிந்த நீட் முடிவு தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டி, இந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
பல இடங்களில் நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி மாணவர்கள் பிடிபட்டதாகவும், கருணை மதிப்பெண் என்ற பெயரில் மாணவர்களுக்கு தேர்வு முகமை முறைகேடாக மதிப்பெண் வழங்கியதாகவும் மாணவர்கள் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த தேர்வினை ரத்து செய்துவிட்டு புதிய தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.
English Summary
NEET 2024 Exam case SC Order