நீட் கோச்சிங் கொடூரம்: வசமாக சிக்கிய 27 பள்ளிகள் - சிபிஎஸ்இ எடுத்த அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


சிபிஎஸ்இ (CBSE) நிர்வாக அதிகாரிகள் ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள 27 பள்ளிகளில் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், பள்ளி நேரத்தை தவிர்த்து நீட் (NEET) பயிற்சி மையங்களுக்கு செல்லும் நிலை அதிகரித்துள்ளதாகவும், இதனால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்து, கல்வி தரம் பாதிக்கப்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, 21 பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப் பெற சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. மேலும், 6 பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அங்கீகாரத்தை சிபிஎஸ்இ ரத்து செய்துள்ளது.

அதன்படி, 12 ஆம் வகுப்பு வரை அளிக்கப்பட்ட அங்கீகாரம் தற்போது 10 ஆம் வகுப்பிற்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த 27 பள்ளிகள் சிபிஎஸ்இ அமைப்பிற்கு எழுத்துப்பூர்வ விளக்கங்களை அளித்த நிலையில், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சிபிஎஸ்இ நடவடிக்கை எடுத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet coaching centre CBSE school


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->