விசிக-வின் சாதிக் கலவர திட்டம்: தமிழகத்தை அதிரவைத்த பாமக & வன்னியர் சங்கத்தின் போராட்டம்!
PMK and Vanniyar sangam Protest against VCK
கடலூர் மாவட்டம், மஞ்சக்கொல்லை கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பாமக தொண்டர் செல்லத்துரையின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மிரட்டல் விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சாதி கலவரத்தை தூண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி இன்று தமிழகம் முழுவதும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பாமகவை சேர்ந்த அருள் இரத்தினம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் திட்டமிட்டு சாதிக் கலவரம் நடத்தும் நோக்கில் "வன்னியர் சங்கத் தலைவர் தலையை வெட்டுவோம்" என்று மிரட்டிய விசிகவினரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி தமிழ்நாடெங்கும் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடைபெற்ற இடங்கள்:
1. திருவள்ளுர் மேற்கு, 2. திருவண்ணாமலை மேற்கு, 3. விழுப்புரம் செஞ்சி, 4. சேலம் தாரமங்கலம்., 5. கும்பகோணம், 6. காஞ்சிபுரம் மேற்கு, 7. சேலம் கிழக்கு, 8. ஈரோடு, 13. அரியலூர், 14. திருவள்ளுர் மேற்கு, 15. திருப்போரூர், 16. சேலம் தெற்கு மாவட்டங்கள், 17. கோபிச்செட்டிப்பாளையம், 18. செங்கல்பட்டு மேற்கு, 19. ராணிப்பேட்டை, 20. ஈரோடு வடக்கு, 21. தருமபுரி, 22. அச்சிறுபாக்கம், 23. திண்டிவனம், 24. சங்ககிரி, 25. நாமக்கல், 26. சேலம் மாநகர், 27. கள்ளக்குறிச்சி, 28. சேலம் வடக்கு, 33. கன்னியாகுமரி, 34. திருப்பூர், 35. மாமல்லபுரம், 36. கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம். 37. சேலம் மேற்கு, 38. காஞ்சிபுரம் கிழக்கு, 39. சோழகங்க நல்லூர், 40. எடப்பாடி
English Summary
PMK and Vanniyar sangam Protest against VCK