வரும் 16 ஆம் தேதி... களத்தில் இறங்கும் தங்கமணி! எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மதுரை மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர்த் திட்டங்களை முடக்குவதைக் கண்டித்தும், மதுரை மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர்படுத்திடவும், கனிம வளம் கடத்தலைக் கண்டித்து வரும் 16 ஆம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "தமிழ் நாட்டில் வாழும் மக்கள் அனைத்து வகைகளிலும் சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும்; மக்கள் எவ்வித துன்பத்திற்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகாத வகையில் தங்கள் வாழ்க்கையை நடத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடும், எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் மக்கள் நலன் காக்கும் பல்வேறு முத்தான திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டதை இந்த நாடே நன்கு அறியும்.

இந்நிலையில், நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த திரு. ஸ்டாலினின் திமுக அரசு, கடந்த 42 மாத காலமாக கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கியும், கிடப்பில் போட்டும் வைத்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரிய விஷயமாகும்.
-
அந்த வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட லோயர்கேம்ப் மதுரை மாநகராட்சி இரும்புக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இத்திட்டத்தை முடக்கியுள்ள திரு. ஸ்டாலினின் திமுக அரசை கண்டித்தும்; தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்த, திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள விரிவாக்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதைக் கண்டித்தும்; பொதுமக்கள் நலன் கருதி, மதுரை மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர்படுத்த வலியுறுத்தியும்; வண்டல் மண் அனுமதி என்ற போர்வையில் கனிம வளம் கடத்தலைக் கண்டித்தும்; மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு மக்கள் விரோத செயல்களைக் கண்டும் காணாமலும் இருந்து வரும் திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 16.11.2024 சனிக் கிழமை காலை 10.30 மணியளவில், திருப்பரங்குன்றத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, M.L.A., அவர்கள் தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான V.V. ராஜன் செல்லப்பா, M.L.A., அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று எடப்பாடி K. பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS protest announce Madurai Thangamani DMK MK Stalin udhay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->