பாஜகவிற்கு அயோத்தி செய்தி வழக்கிவிட்டது! நீட் பணக்கார மாணவர்களுக்கான தேர்வு! - ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வை பணக்கார மாணவர்களுக்கான தேர்வாக மத்திய அரசு மாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, அயோத்தி தொகுதியில் வெற்றி பெற்ற சாமஜ்வாதி கட்சியின் உறுப்பினருக்கு எனது வாழ்த்துக்கள்.

ராமர் பிறந்த இடத்திலேயே பாஜகவிற்கு செய்தி வழங்கப்பட்டுவிட்டது. அந்தச் செய்தி நமது கண் முன்னே அமர்ந்திருக்கிறது. அயோத்தியாவில் நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள் என நான் தெரிந்து கொண்டேன்.

ராமர் கோயிலை திறந்து வைத்த போது அதில் அம்பானி, அதானி மட்டும் தான் இருந்தார்கள் ராமர் கோவில் திறப்பில் அயோத்தியாவை சேர்ந்த மக்கள் இல்லை. அந்த நிகழ்ச்சி மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் தேர்வு குறித்து பேசியதாவது, நீட் என்பது தொழில் முறை தேர்வு அல்ல. வணிக ரீதியிலான தேர்வு. நீட் தேர்வு மாணவர்களுக்கான போட்டி தேர்வாக இல்லை.

நீட் தேர்வில் ஒரு மாணவர் டாப்ராக வர முடியும். ஆனால் அவரிடம் பைசா இல்லை என்றால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது. நீட் தேர்வு பணக்கார குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்டது என ராகுல் காந்தி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET exam for rich students Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->