டிராக்டர்-பைக் மோதி விபத்து.! திருமணமான 3 நாட்களில் புதுமண தம்பதி பலி.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் திருமணமான மூன்று நாட்களில் புதுமண தம்பதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலம் இட்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் பினு (27). இவருக்கும், ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த பிரதினா(22) என்ற பெண்ணிற்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பினு மனைவியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் இன்று மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது கஞ்சம் மாவட்டம் கொலந்தரா பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன் மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணவன்-மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து டிராக்டர் ஓட்டுனரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Newlywed couple dies after 3 days of marriage in tractor bike accident in odisha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->