இரண்டு நாட்களுக்கு வட இந்தியாவில் மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "வடமேற்கு இந்தியாவில், பஞ்சாப், அரியானா, சண்டிகர், மேற்கு உத்தர பிரதேசம் மற்றும் கிழக்கு உத்தர பிரதேசம் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.

இதேபோன்று, ராஜஸ்தான் மாநிலத்திலும், மேற்கு இமயமலை பகுதியில் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். 
இதைத்தொடர்ந்து, டெல்லியிலும் நாளை லேசான மழை பெய்ய கூடும்.

கடந்த சில வாரங்களாக நாட்டில் கடுங்குளிர் நிலவி வந்த நிலையில், மேற்கு நோக்கி வீச கூடிய காற்றால் குறைந்தபட்ச வெப்பநிலையானது, இன்று மூன்று டிகிரி செல்சியசிலிருந்து 5 டிகிரி செல்சியசாக அதிகரிக்க கூடும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வடமேற்கு இந்தியாவில் நாளையும், நாளை மறுநாளும் மணிக்கு 20 முதல் 30 கி.மீ. வரையிலான வேகத்துடன் கடுமையான காற்று வீசும். இதையடுத்து, இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் தரை பகுதியில் பனிபடர்ந்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next two days heavy rains in north india Meteorological Center info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->