இன்னும் 2 வருஷம் தான், அப்புறம் பாருங்க., வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தியை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.! - Seithipunal
Seithipunal


இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்று, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்து பேசுகையில், 

"பாராளுமன்ற வளாகத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவினால், எம்.பி.க்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த முடியும்.

இறக்குமதி மாற்று, குறைந்த செலவில் அதிக செயல்திறன், மாசு இல்லாத மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவையே நம் அரசாங்கத்தின் கொள்கை.

கிரீன் ஹைட்ரஜன், மின்சாரம், எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ-எல்என்ஜி மற்றும் பயோ-சிஎன்ஜி. அந்த திசையில் நாம் செயல்படுவோம்.

இன்னும் 2 வருடங்களில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும்" என்று அமைச்சர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitin Gadkari electric vehicles


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->