இந்த வாரம் வெளியாகும் ஓ.டி.டி திரைப்படங்கள் லிஸ்ட்!
OTT New Movies Tamil feb 2025
திரையரங்குகளை போலவே வாரயிறுதிகளை முன்னிட்டு புதிய படங்கள் மற்றும் தொடர்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகின்றன. அந்த வகையில், இந்த வாரம் வெளியாகும் முக்கியமான ஓ.டி.டி. வெளியீடுகளை பார்ப்போம்.
வணங்கான் (TENTKOTTA)
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘வணங்கான்’, தற்போது டென்ட்கொட்டா ஓ.டி.டி. தளத்தில் பிரபலமாகியுள்ளது.
டாகு மகாராஜ் (NETFLIX)
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில், பாபி கொல்லி இயக்கிய ‘டாகு மகாராஜ்’, பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா ஆகியோருடன் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
பாட்டல் ராதா (AHA TAMIL)
பா.ரஞ்சித் தயாரிப்பில், மதுவால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் ‘பாட்டல் ராதா’ திரைப்படம் ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகியுள்ளது.
செல்பி (SIMPLY SOUTH)
மதிமாறன் இயக்கிய, ஜி.வி. பிரகாஷ், கவுதம் வாசுதேவ் மேனன், வர்ஷா பொல்லம்மா நடித்த ‘செல்பி’, ஆக்சன் திரில்லர் காதலாக சிம்பிலி சவுத் தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆபீஸ் (JIO CINEMA)
கபீஸ் இயக்கிய நகைச்சுவை தொடர் ‘ஆபீஸ்’, தாசில்தார் அலுவலகத்தைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு ஜியோ சினிமாவில் வெளியாகியுள்ளது.
முபாசா: தி லயன் கிங் (AMAZON PRIME)
பேரி ஜென்கின்ஸ் இயக்கிய பிரம்மாண்டமான அனிமேஷன் திரைப்படம் ‘முபாசா: தி லயன் கிங்’, உலகளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்த பின்னர் அமேசான் பிரைம் தளத்தில் வந்துள்ளது.
தி ஒயிட் லோட்டஸ் - சீசன் 3 (JIO CINEMA)
மைக் ஒயிட் இயக்கிய ‘தி ஒயிட் லோட்டஸ்’ தொடர், அதன் மூன்றாவது சீசனுடன் ஜியோ சினிமாவில் வெளியாகியுள்ளது.
சாட்சி பெருமாள் (TENTKOTTA)
உண்மை சம்பவத்தைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘சாட்சி பெருமாள்’ திரைப்படம், டென்ட்கொட்டா ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது.
English Summary
OTT New Movies Tamil feb 2025