பெண் சுதந்திரத்தால் திருமணம் கடினமாகிவிட்டது'' - சர்சையைக் கிளப்பிய தமன்.!
music director dhaman speech controversy
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன், தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், இவர் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான 'பாய்ஸ்' படத்தில் நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' என்ற படத்தில் தமன் நடிக்கிறார். இந்த நிலையில், திருமணம் பற்றி இவர் கூறி இருக்கும் கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.
அதாவது:- 'திருமணம் செய்து கொள்' என்று நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. ஏனென்றால், திருமணத்தை காப்பாற்றுவது தற்போது கடினமாகிக் கொண்டே வருகிறது.
இன்றைய பெண்கள் யாரையும் சார்ந்திராமல் சுதந்திரமாக இருக்க விரும்புவதே அதற்கு காரணம்' என்றுத் தெரிவித்தார். இசையமைப்பாளர் தமனின் இந்தக் கருத்து பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது.
English Summary
music director dhaman speech controversy