Monkeypox: இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் இல்லை! - Seithipunal
Seithipunal


MPox எனப்படும் குரங்கம்மை நோய்  முதலில் ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது. தற்போது ஐரோப்பிய, ஆசியா என 100க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியிருக்கிறது.  ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் இல்லை என ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை தொடர்ந்து உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு பரவி வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து விமான நிலையங்கள் மற்றும் வங்காளதேசம், பாகிஸ்தான் எல்லையில் உள்ள துறைமுகங்களில் வரும் சர்வதேச பயணிகளிடம் குரங்கம்மை பாதிப்பு அறிகுறிக குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் ​​நாட்டில் உள்ள 32 ஆய்வகங்களில் குரங்கம்மை பரிசோதனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் இல்லை என ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை MPox பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No case of monkeypox in India: Union Health Department informs!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->