2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? - மத்திய அரசு விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


வங்கியில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 19-ந்தேதி அறிவித்தது. பின்னர் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தது. 

அதன் படி பொதுமக்கள் தண்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றி வருகின்றனர். இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை மற்றும் காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா? என்று மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதிலளித்தார். அந்த பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'தற்போதைய நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவும் அரசிடம் இல்லை. 

2,000 ரூபாய் நோட்டுகளைப்போல உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் அரசிடம் உள்ளதா? என்ற கேள்விக்கும், இல்லை என்றே அவர் பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no extension time for 2000 notes change central govt info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->