இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: மரண மாஸான இந்திய அணி!
ENG vs IND T20 2025 Team India
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 22ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்துகிறார், அக்ஷர் படேல் துணைக் கேப்டனாக செயல்படுகிறார். காயம் காரணமாக 14 மாதங்கள் அணியில் இடம் பெறாத முகமது ஷமி திரும்பியுள்ளர்.
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்சித் ராணா இருவரும் இங்கு அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
**இந்திய அணி விவரம்:**
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதீஷ் குமார் ரெட்டி, அக்ஷர் படேல் (துணைக் கேப்டன்), ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரெல்.
English Summary
ENG vs IND T20 2025 Team India