இனி பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது? - மத்திய அமைச்சகம்! - Seithipunal
Seithipunal


தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் நாளை மறுநாள் காலை 6 மணி வரை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம்  (www.passportindia.gov.in) நேற்று இரவு 8 மணிக்கு முடங்கிய நிலையில்,  நாளை மறுநாள் காலை 6 மணி வரை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தை பயன்படுத்த முடியாது என்பதோடு, தங்களது நேர ஒதுக்கீடு, சந்தேகங்களுக்கு, பராமரிப்பு பணி முடிந்த பிறகு அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும்  மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் நேர்காணல் உறுதி செய்யப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அடுத்த நேர்காணல் குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக வெளிநாடு செல்வோர் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பொது விசாரணை நேர்காணல் அலுவலகம் வழக்கம் போல் இயங்கி வருகிறது. இதனால் சில விண்ணப்பதாரர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No more passport website central ministry


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->