ஜம்மு காஷ்மீரில் பதற்றம் : 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான துப்பாக்கி சண்டையில் என்கவுண்டரில்  2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அங்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தொடர்ந்து வரும் 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவத்தினர்  மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து குப்வாரா மாவட்டத்தில் உள்ள  குகல்தார் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் பதுங்கி இருந்தவர்களை கண்ட இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில், என்கவுண்டரில்  2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ள நிலையில், தொடர்ந்து இந்திய ராணுவத்தினர்  மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tension in jammu and kashmir 2 terrorists shot dead in an encounter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->