திருப்பதி பிரம்மோற்சவ விழா அதிவிமர்சை : மேள தாளம் முழங்க பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்த சுந்திரபாபு நாயடு! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அதிவிமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக விமானம் மூலம் ரேணிகுண்டா வந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ்வர் பூங்கொத்து அளித்து வரவேற்றார்.

பின்னர் இங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்ற சந்திரபாபு நாயுடுவை, தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து,  மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க சந்திரபாபுநாயுடு பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று கோவிலுக்குள் நுழைந்து, மூலவர் ஏழுமலையானிடம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தும், தங்கக்கொடிமரத்துக்கு மாலை அணிவித்தும்  சாமி தரிசனம் செய்தார்.


அப்போது அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகுல மண்டபத்தில் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கியதோடு, லட்டு, தீர்த்த பிரசாதம் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் சந்திரபாபுநாயுடுவின் மனைவி புவனேஸ்வரி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati brahmotsava festival critical review sandrababu naidu presented silk clothes to drum beat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->