வெங்காய ஏற்றுமதிக்கு எந்தவித தடையும் இல்லை - மத்திய அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெங்காயம் ஏற்றுமதி குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு எந்தவித தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.4,343 கோடி மதிப்பிலான வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 16.3 சதவீதம் அதிகமாகும்.

இதில், டிசம்பர் மாதத்தில் மட்டும் வெங்காயம் ஏற்றுமதி நவம்பர் மாதத்தை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வா்த்தக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no restriction on onion export Central government announcement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->