திமுக எம்.எல்.ஏ வுக்கு ஆபாச படம் அனுப்பி பணம் பறித்த வாலிபர் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திமுக எம்.எல்.ஏ வுக்கு ஆபாச படம் அனுப்பி பணம் பறித்த வாலிபர் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சரவணகுமார். திமுகவை சேர்ந்த இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ கால் மூலம் ஆசாமி ஒருவர் பேசியுள்ளார். 

அதன் பின்னர் அந்த நபர் சிறிது நேரத்திலேயே சரவணகுமாருடன் இணைக்கப்பட்ட ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பி மிரட்டி சரவணக்குமாரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ சரவணகுமார் தேனி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். 

இந்த புகாரின் படி போலீசார் தீவிரமாக விசாரணையில் இறங்கினர். அந்த விசாரணையில், எம்.எல்.ஏவிற்கு ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த ஆசாமி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அர்ஷ்த் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சைபர் க்ரைம் போலீசார் ராஜஸ்தான் மாநிலத்திற்கு விரைந்துச் சென்று அல்வாரை அடுத்துள்ள கோவிந்த் கர்க் பகுதியில் அர்ஷத்தை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north state youth arrested for send obscene vedio to dmk mla


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->