பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாது..மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் உறுதி! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில்  26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ,பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மத்திய அரசு  பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.மேலும்  பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: "சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக மோடி அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு முற்றிலும் நியாயமானது மற்றும் தேசிய நலனுக்கானது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டத்திற்குப் பிறகு சி.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Not a single drop of water will go into Pakistan Union Minister CR Patil


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->