ஓடும் ரயிலில் எற முயன்ற நர்சிங் மாணவி - நொடியில் நேர்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தின் ரெயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் நர்சிங் மாணவி தவறி விழுந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில், நர்சிங் மாணவி நடைமேடையில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அதற்குள் ரெயில் கிளம்பியதால் மாணவி சற்றும் பதற்றப்படாமல் நடந்து சென்று ஓடும் ரெயிலில் ஏற முற்பட்டார்.

ரெயில் பெட்டி கதவின் பிடியை பிடித்து படியில் கால் வைக்க முயன்றபோது கால் தவறி தண்டவாளத்திற்குள் விழுந்தார். இதைபார்த்த சக பயணிகள் கூச்சலிட்டதுடன் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். 

பின்னர், தண்டவாளத்தில் சிக்கியிருந்த மாணவியை மீட்டனர். இதையடுத்து அந்த சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவத்தில் மாணவி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nursing student injured step down train in kerala


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->