மாதவிடாய் காலத்தில் விடுப்பு - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட ஒடிசா அரசு.! - Seithipunal
Seithipunal


இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதன் படி, ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அம்மாநில துணை முதலமைச்சர் பிராவதி பரிடா கலந்து கொண்டார். 

அப்போது, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்றும் இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார். இந்த விடுப்பு அந்த மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் பொருந்தும். இந்த விடுப்பு, மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாட்களில் எடுத்துக் கொள்ளலாம்.

பெண்களின் உடல் ஆரோக்ய நலனில் இந்தத் திட்டம் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே இந்தியாவில் கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் அமலில் உள்ளது. தற்போது ஒடிசாவும் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

odisa govt announce leave to womans of periods time


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->