இருதரப்பு மோதல்! போலீஸ் குவிப்பு - பதற்றம் - ஊரடங்கு உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஒரு சமூகத்தினரை அவமதிக்கும் விதமாக விலங்குகளை பலியிட்டு, ரத்தத்தை சாலையில் ஓடவிட்ட விவகாரத்தில், இரண்டு சமூகத்தினர் இடையே மோதல் வெடித்ததால், ஒடிசா மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஒடிசா மாநிலம், பாலசோர் நகரில் உள்ள புஜாக்கியா பிர் பகுதியில், ஒரு சமூகத்தினர் விழா ஒன்றுக்காக விலங்குகளை பலியிட்டு, அதன் ரத்தத்தை சாலையிலேயே தெறிக்க விட்டுள்ளனர். 

இது குறித்து அறிந்த மற்றொரு சமூகத்தினர், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, இந்த விவரத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு சமூகத்தினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், இரண்டு தரப்பினரையும் சமாதானபடுத்த முயற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது போலீசாருக்கும் பலத்த அடி விழவே, நிலமை கட்டுப்பாட்டை மீற, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

அந்தப் பகுதியில் மேலும் மோதல் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், மக்கள் யாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், கடைகள், வணிக வளாகங்கள் மூட சொல்லி அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இந்த கலவரம் தொடர்பாக தற்போது வரை முப்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

odisha Balasore town curfew 


கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?




Seithipunal
--> -->