பெண் போலீசுடன் தகாத உறவு: காவல் ஆய்வாளர் மீது பாய்ந்த நடவடிக்கை!
Odisha Police Inspector Illegal Affair
ஒடிசாவில் பெண் காவலருடன் தகாத உறவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெகத்சிங்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர், அதே நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலரிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகியுள்ளார்.
பலமுறை உடலுறவு கொண்ட பின்னர், திருமணம் செய்ய மறுத்தபோது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பெண் காவலர் புகார் அளித்தார்.
காவல் ஆய்வாளர் மீது தவறான நடத்தை, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஒழுங்கு மீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையான விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
English Summary
Odisha Police Inspector Illegal Affair