திருவண்ணாமலை கோயிலில் அனிருத் தரிசனம்!
Music Director Aniruth Visit Thiruvannamalai Temple
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் செய்தார்.
இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடியிருந்தபோதிலும், அனிருத் பொதுமக்களுடன் இணைந்து பொறுமையாக வரிசையில் நின்று தரிசனம் செய்தார்.
நீண்ட நேரம் கற்ப கிரகத்தின் அருகில் கண்களை மூடிக்கொண்ட அனிருத், முழு ஈடுபாடு உடன் வழிபாடு நடத்தினார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கும் அனிருத், தற்போது கூலி, ஜனநாயகன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இசையமைப்புப் பணியில் பிசியாக இருந்தாலும், ஆன்மிகத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
அனிருத்தின் கோவில் தரிசன வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
English Summary
Music Director Aniruth Visit Thiruvannamalai Temple