நாளை வெளியாகும் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் புது அப்டேட்.!
tommorrow released kooli movie update
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படமானது ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது கூலி படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த அப்டேட் நாளை காலை 11 மணியளவில் வெளியாக உள்ளது.
English Summary
tommorrow released kooli movie update