மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தார் மோர்னே மோர்கல்..!
Morne Morkel rejoins Indian team
08 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலும் அணியுடன் சென்றிருந்தார்.
இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் கடந்த 20-ந்தேதி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இந்த போட்டி தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக மோர்னே மோர்கல் சொந்த நாடு திரும்பியிருந்தார்.

அதன் காரணமாக, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக பந்து வீச்சு பயிற்சியாளர் இல்லாமல் விளையாடியது. இந்த நிலையில் இன்று மீண்டும் மோர்னோ மோர்கல் அணியுடன் இணைந்துள்ளார்.
இந்நிலையில்,ஐசிசி அகாடமியில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று பயிற்சியின் போது மோர்னே மோர்கலா் மற்றும் கவுதம் கம்பீர் உடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். சாம்பியன்ஷிப் கோப்பை போட்டியில், இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மார்ச் 02-ந்தேதி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
English Summary
Morne Morkel rejoins Indian team