போலீஸ் ஸ்டேசன் அருகில், பஸ்சுக்குள் பெண் சீரழிப்பு; குற்றவாளி தலைமறைவு..!
Woman Abused in bus near police station culprit absconding
புனேயில் 26 வயதான பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேசன் அருகே பஸ் ஒன்றில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேயின் சுவார்கேட் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை 5:45 மணிக்கு பாதிக்கப்பட்ட பெண் பஸ்சுக்காக காத்திருந்துள்ளார். அப்போது, வந்த மர்ம நபர் ஒருவர் சகோதரி என அழைத்து பஸ் மறு புறம் நிற்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண் அங்கு சென்றுள்ளார்.
குறித்த பஸ் அப்பகுதி போலீஸ் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் பஸ் நின்றுள்ளது. ஆனால், அங்கத பெண் அதில் தனியாக ஏற தயங்கியுள்ளார். அந்த நபர் தான் உதவி செய்வதாக உள்ளே அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

குறித்த அசம்பாவிதம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அந்த நபர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்து உள்ள துணை முதல்வர் அஜித் பவார், குற்றவாளியை தூக்கில் போடவேண்டும் எனக் கூறியுள்ளார்.
English Summary
Woman Abused in bus near police station culprit absconding