தொட்டித் தண்ணியில் குளித்த முதியவரை புரட்டி எடுத்த வீட்டின் உரிமையாளர் - ஹரியானாவில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


தொட்டித் தண்ணியில் குளித்த முதியவரை புரட்டி எடுத்த வீட்டின் உரிமையாளர் - ஹரியானாவில் பரபரப்பு.! 

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்தர் ரோஹில்லா. தனது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய பின்னர் குளிப்பதற்கு மேல்நிலைத் தொட்டியில் சேமிக்கப்பட்டு இருந்த தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளார். 

அவர் குளித்த சிறிது நேரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் உட்பட மூன்று பேர் அவரைத் தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் முதியவரைத் தாக்கிய நபர்கள் மீது முதல் நிலை அறிக்கை எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ரோஹ்தக்கில் உள்ள முதுகலை மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவர்கள், முதியவரின் பார்வையை முழுமையாக மீட்டெடுக்க ஆறு மாதங்கள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்ததாவது:- “எனது இடது கண் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்பில் ஏற்பட்ட காயம் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளதால், குறைந்தது பதினைந்து நாட்கள் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த நபர்களை அழித்துச் சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீரை வீணடித்ததற்காக முதியவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man admitted hospital for three peoples attack in hariyana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->