இந்தியாவின் 4 திசைகளிலும் உள்ள புனித தலங்களுக்கு சைக்கிளில் செல்லும் "முதியவர்"..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜாகோட்டை பகுதியை சேர்ந்தவர் ராசிக்போலா (64). இவர் இறந்த பெற்றோரின் நினைவாக இந்தியாவின் நான்கு திசைகளிலும் உள்ள புனித தலங்களுக்கு சைக்கிளில் ஆன்மிக பயணம் மேற்கொள்ள முடிவு செய்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு மேற்கு கடற்கரையில் உள்ள குஜராத் மாநிலம், துவாரகா புண்ணிய ஸ்தலத்தில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

இதில் 4 திசைகளில் உள்ள, கிழக்கில் ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோவில், மேற்கில் உள்ள குஜராத் துவாரகா கோவில், வடக்கில் உள்ள உத்தரகாண்ட் பத்திரிநாத் சிவன் கோவில், தெற்கில் உள்ள ராமேஸ்வரம் கோவில் போன்ற புண்ணிய தலங்களுக்கு சைக்கிளில் ஆன்மிக பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்ற ராசிக்போலா, தற்பொழுது தெற்கு திசையில் உள்ள ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்வதற்காக தமிழகம் வந்துள்ளார். மேலும் நேற்று மாமல்லபுரம் வந்த அவர், வாட்டி வதைக்கும் வெயில் உடலில் படாமல் இருக்க மூங்கில் கூடையை தலையில் தொப்பியாக அணிந்துள்ளார். இதைத்தொடர்ந்து, சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டருக்கு தனது சைக்கிள் பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old man cycling to holy places in India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->