உ. பி : பிள்ளைகள் கவனிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான முதியவர் - சொத்துக்களை அரசுக்கு உயில் எழுதிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலமத்தில் உள்ள முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாத் சிங். எண்பத்தைந்து வயதுடைய இவருக்கு மனைவி, ஒரு மகன், நான்கு மகள்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் வீடு மற்றும் நிலம் உள்ளது. 

இவருடைய மகன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதேபோல் நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இதற்கிடையே நாத் சிங் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.

இதனால், தனியாக வசித்து வந்த நாத் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதியோர் இல்லத்திற்கு சென்றார். இந்நிலையில், நாத் சிங் தனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தன்னைச் சந்திக்க வராததால் மனம் உடைந்துள்ளார். இதனால், தனது நிலத்தை மாநில அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். 

இந்த நிலத்தில், அவர் இறந்த பிறகு ஒரு மருத்துவமனை அல்லது பள்ளியைக் கட்டும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் நாத் சிங் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார். மேலும், தனது இறுதிச் சடங்கில் மகன் மற்றும் நான்கு மகள்களும் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man write wills property to uttar pradesh government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->