மேளதாளத்துடன் மின்வாரிய ஊழியருக்கு இனிப்பு வழங்கிய மூதாட்டி! எதற்கு தெரியுமா?
Old woman gave sweets to the electricity worker with a tambourine in haryana
அரியானா மாநிலம் பானிபட் என்ற இடத்தில் இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட ஒரு வீட்டில் மூதாட்டி வசித்து வந்துள்ளார். அவர் வீட்டிற்கு மின் கட்டணமாக 21 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அப்பகுதி மக்களிடம் முறையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மூதாட்டி உடன் இணைந்து மேயாதாலத்துடன் இனிப்புகளை எடுத்துக்கொண்டு மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கியுள்ளனர்.
இதனைக் கண்ட அதிர்ச்சி அடைந்த மின்வாரிய ஊழியர்கள் செய்வது அறியாது திகைத்து நின்றனர். மேலும் மூதாட்டியுடன் சென்ற பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களை சமாதானம் செய்த மின்வாரிய ஊழியர்கள் விரைவில் இந்த தவறை சரி செய்வதாகவும் உறுதியளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Old woman gave sweets to the electricity worker with a tambourine in haryana