கொல்லம்: தெருநாய்கள் தாக்கியதில் 1½ வயது குழந்தை படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் தெருநாய்கள் தாக்கியதில் ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள மய்யநாடு பகுதியை சேர்ந்த பாட்டி ஒருவர் ஒன்றரை வயது குழந்தைக்கு உணவு கொடுத்து விட்டு வீட்டிற்குள்ளே சென்றுள்ளார். இதையடுத்து குழந்தை வீட்டின் முன்பு தனியாக விளையாடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது சுமார் 25 தெரு நாய்கள் சேர்ந்து குழந்தையை தாக்கியுள்ளது. இதைப் பார்த்த பாட்டி அதிர்ச்சடைந்து, உடனடியாக அருகில் இருந்த மரப்பலகையால் நாய்களை துரத்தினார்.

இதில் குழந்தை பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை மாவட்ட மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறது. மேலும் சமீபகாலமாக தெரு நாய்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one and half year old child was seriously injured after being attacked by stray dogs in kollam kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->