நீட் முறைகேடு - ஜார்கண்டில் மேலும் ஒருவர் கைது.! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரைக்கும் 6 வழக்குகளை பதிவு செய்துள்ள அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களில் சோதனை, கைது என்று தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜார்கண்டை மையமாக கொண்டு செயல்படும் வினாத்தாள் கசிய விடும் கும்பல் ஒன்று குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உளவுத்தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி விசாரணை நடத்தியதில், தன்பாத்தை சேர்ந்த அமன் சிங் என்பவரை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். 

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இவரும் ஒரு குற்றவாளி என்பதால், அமன் சிங்கிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக்கை மையமாக கொண்டு இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோரை சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one more man arrest neet malpractice issue in jarkant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->