மணிப்பூர் விவகாரம் - ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சிகள் கூட்டணி​ இன்று சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் விவகாரம் - ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சிகள் கூட்டணி​ இன்று சந்திப்பு.!

மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் கைக்கொடுக்கவில்லை.

இதையடுத்து, மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணி வலியுறுத்தி வருகிறது. அதற்காக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளது.

கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் 21 பேர், மணிப்பூர் சென்று வந்தனர். அங்குள்ள நிலவரத்தை 'இந்தியா' கூட்டணி தலைவர்களிடம் எடுத்துரைத்தனர். இந்த நிலையில், இந்தப் பிரச்சினையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் தலையீட்டை இந்தியா கூட்டணி கோரியுள்ளது. 

அதன் படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி சார்பில் முறையிட நேரம் ஒதுக்கக்கோரி, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதைத்தொடர்ந்து, ஜனாதிபதி முர்மு இன்று காலை 11.30 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

opposition parties meet president droubati murmu today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->