மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை... குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர்.. விமான சேவை முடக்கம்..!! - Seithipunal
Seithipunal



மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் மும்பை மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் மும்பைக்கு இரண்டு நாட்களுக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்த கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக அடுத்த சில மணி நேரங்களுக்கு கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இதனிடையே இந்த கனமழையின் காரணமாக மும்பையில் விமான சேவை பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்திற்குள் மழைநீர் தேங்கியுள்ளதால் மற்ற செயல்பாடுகளும் பாதிக்கப் பட்டுள்ளன. மேலும் மும்பையின் பல்வேறு  சாலைகளிலும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சாலைகளில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் மும்பையின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை மட்டுமல்லாது மகாராஷ்டிராவின் பிற மாவட்டங்களிலும் அடுத்து வரும் நாட்களில் இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என்று எச்சரித்துள்ளது. 

இந்நிலையில் மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 93.16 மி. மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Orange Alert For Mumbai Flight Service Affected Due to Heavy Rain


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->