பெண்ணின் திருமண உயர்வு சட்டம்.. தில்லாக கருத்து சொன்ன பிக்பாஸ் ஓவியா.! - Seithipunal
Seithipunal


பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கும் நேரத்தில் இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்த வண்ணம் இருக்கின்றனர். 

இத்தகைய சூழலில், பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா இந்த சட்ட திருத்தம் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கின்றார். அதில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவது நல்ல முடிவுதான் என்று அவர் கூறியுள்ளார். 

இந்த சட்டத்திருத்தம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை ஓவியா பெண்களின் திருமண வயதை உயர்த்துவது மிக சரியான முடிவு. பிறந்ததில் இருந்தே பல்வேறு விஷயங்களை தியாகம் செய்து மிகப் பெரிய, பெரிய பொறுப்புகளை அவர்கள் சுமக்கத் தேவையில்லை. 

இந்த சட்டத் திருத்தத்தை நான் மிகவும் ஆமோதிக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். தற்போது அவரது ரசிகர்களும் இதை ஆதரிப்பதாக அவரது கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oviya speech about Marriage law


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->