பாகிஸ்தான் பயங்கரவாதிகளை "போராளிகள்" என்ற பிபிசி செய்தி ஊடகம் - இந்தியா கடும் கண்டனம்!
Pahalgam attack india condemn to BBC
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்தியவர்களை "போராளிகள்" என பிபிசி குறிப்பிட்டதைக் கண்டித்து, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
"காஷ்மீர் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தியது" என்ற தலைப்பில் பிபிசி வெளியிட்ட கட்டுரையில், பயங்கரவாதிகளின் தாக்குதலை "போராளி தாக்குதல்" என்று விவரித்தது. இதனை கண்டித்து, இந்திய வெளியுறவுத் துறையின் பிரதி ஒருங்கிணைப்பாளர் ஜாக்கி மார்டினுக்கு நேரடியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், "இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை ‘போராளி தாக்குதல்’ எனக் கூறுவது தீவிரவாத நடவடிக்கைகளை மறைமுகமாக நீதிப்படுத்தும் முயற்சி ஆகும்" என்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய விசாக்களை ரத்து செய்தது குறித்து பிபிசி செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், எதிர்காலத்தில் பிபிசி வெளியிடும் இந்திய தொடர்பான செய்திகளை வெளியுறவுத் துறை குறியாக கண்காணிக்கும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
English Summary
Pahalgam attack india condemn to BBC