சிறுநீரகத்தில் மின்சாரம் - சாதனை படைத்த பாலக்காடு ஐஐடி விஞ்சானிகள்.!
palakadu iit students found electric from human urine
கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு ஐ.ஐ.டி. கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள், மனித சிறுநீரில் இருந்து மின்சாரம் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் ஆய்வக பரிசோதனையில் ஈடுபட்டனர். இதற்காக சிறுநீர் சேகரிக்கப்பட்டு அதற்கென்று வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரோ கெமிக்கல் ரிசோர்ஸ் ரெக்கவரி ரியாக்டர் மின்கலத்தின் உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு மின்சாரமாகவும், நைட்ரஜன், மக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை அதிக அளவு அடங்கிய இயற்கை உரமாகவும் தயாரிக்கப்படுகிறதுகலாம் என்று தெரிய வந்தது.
தற்போது நிகழ்த்தப்பட்ட ஆய்வக முறையில் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட இந்த பொருட்கள் அனைத்தும் வர்த்தக முறையில் தயாரிப்பதற்கு ஏதுவாக ஆய்வுகள் மேம்படுத்தப்படும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீர் மூலம் கிடைக்கும் மின்சாரத்தில், செல்போன்களை சார்ஜ் செய்யவும், எல்.இ.டி. விளக்குகளை எரிய செய்யவும் முடியும்.
இந்த திட்டத்திற்கு தேவையான மனித சிறுநீர், தியேட்டர்கள், மால்கள், மக்கள் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கு பாலக்காடு ஐ.ஐ.டி. துணை பேராசிரியை பிரவீனா கங்காதரன் தலைமை தாங்கினார்.
அவருடன் பாலக்காடு ஐ.ஐ.டி.யை சேர்ந்த ஆய்வு மாணவி சங்கீதா.வி, மாணவர் பீ.எம்.ஸ்ரீஜித், திட்ட விஞ்ஞானி ரினோ அண்ணா கோஷி உள்ளிட்டோர் சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பொறியியல் துறையினரின் உதவியுடன் இந்த ஆய்வை வெற்றிகரமாக செய்துள்ளனர். இந்த திட்டத்திற்கு சீட் அமைப்பும், இந்திய அரசும் நிதி உதவி அளித்துள்ளனர்.
English Summary
palakadu iit students found electric from human urine