ஆதார் கார்டுடன் இதை இணைக்கவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.! கெடு விதித்த மத்திய அரசு.!
PAN card Aadhaar Number
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆதார் கார்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதில், ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு பலமுறை அறிவுறுத்தி உள்ளது. இதற்கான காலக்கெடுவை தொடர்ந்து நீடித்து வந்தது. தற்போது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மாதம் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் - ஆதார் எண்ணை இணைக்க தவறினால் நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் ஆதார் கார்டு- பான் கார்டை இணைக்க வில்லை என்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அது செல்லாது என்று அறிவிக்கப்படும் என்றும், அத்தகைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமான வரி சட்டத்தின் கீழ் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஏற்கனவே வருமான வரித்துறை தெளிவாக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.