இனி ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் கார்டு செல்லாது..!!
PAN card not linked with Aadhar is no longer valid
வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் வருமான வரி சட்டம் 1961 கீழ் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினரை தவிர அனைத்து பான் கார்டு அட்டைதாரர்களும் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயம். அவ்வாறு இணைக்காத பான் கார்டு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அசாம், மேகாலயா, மற்றும் ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மக்கள், அதே போன்று வெளிநாடு வாழ் இந்தியர்கள், 80 வயதை கடந்த மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு செயல்படாவிட்டால் வருமான வரி செலுத்த முடியாது, நிலுவையில் உள்ள கணக்குகள் மீதான நடைமுறைகளை மேற்கொள்ள முடியாது. அதேபோன்று நிலுவையில் இருக்கும் நடைமுறையை பூர்த்தி செய்ய முடியாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
English Summary
PAN card not linked with Aadhar is no longer valid